Monday, July 2, 2018

மழைப்பாடல்



மழைப்பாடல் நாவலில் காந்தாரியை திருதராஷ்டிரன் கதவை உடைத்து தோளில் தூக்கி வரும் நிகழ்வை பார்த்தபோது  கோவில் தூணில் இருக்கும் 'குறவன் ஒரு ராணியை தோளில் தூக்கி செல்லும் சிலை' ஞாபகம் வந்தது .

இன்னொன்று முன்பு சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது , இப்போது நடந்த ஊட்டி நிகழ்விற்கு முந்திய நிகழ்வில் சிற்ப கலை சார்ந்த வகுப்பு நடந்த போது என் மனதில் வந்தது . குகை கோவில்கள் அல்லது பாறையை  குடைந்து  கோவிலாக  ஆக்குவதற்கும் , தனி தனி பாகங்களாக  செய்து உருவாக்கப்பட்ட  கற்கோவிலுக்கும்  இருக்கும் வித்யாசம் .
இரண்டுமே கிட்டத்தட்ட வேறு வேறு , பாகங்களை   இணைத்து கட்டுவதில் நிறைய சாத்தியம் இருக்கு , தவறிழைத்தால்  அந்த பகுதிகளை மாற்றி வேறு கொண்டுவரலாம்  , குகை கோவில்களில் அந்த சாத்தியமே இல்லை .

இது சாதாரணமா புரிந்து கொள்ளக்கூடிய  விஷயம்தான் , ஆனா   எனக்கு பெரிய விஷன் கொடுத்தது  , ரொம்பநாளா  என் மனதில் இருந்தது

ராதாகிருஷணன்