Friday, November 13, 2015

தேரோட்டி -25



வெண்முரசில்ஒவ்வொரு முறை நிகழும் வர்ணனையும், இதற்க்கு முன் நிகழ்ந்த வர்ணனைகளை படிகளாகக் கொண்டு மேலேருவதாகவே இருக்கிறது.

நீலன் முழுதனிக்கோலத்தில் அமர்ந்திருந்தார் என்று மட்டும் வருகிறது. அவரது மற்றொரு பக்கமான அரிஷ்ட நேமி அணி பூண்டு நிற்கும் கோலதின் வர்ணனை  அதை முற்றிலும் சமன் செய்து சூழல்  வேறொரு அழகு எடுக்கிறது.

சுபத்திரை அர்ஜுனனுக்கு மட்டுமேயான புன்னகையை விழிகளால் அளிக்கிறாள். அங்க மன்னனின் வாழ்த்து வாசிக்கப்படுகையில் நீலன் அர்ஜுனனின் விழிகளை நோக்குகிறான். ஆம் யாரோ ஒருவரின் வெற்றிக்குப் பின்னால், [ஆயிரம் காரணம் அதன் பின்னிருக்கட்டுமே நீலன் சுபத்ரையின் சகோதரன், ஆகவே அவனைத் தவிர்த்து அர்ஜுனனை நிகர் கொள்ளும் ஒரே ஒருவன் ராதேயன் மட்டும்தானே ]யாரோ ஒருவரின் விட்டுக் கொடுத்தாலும் இருக்கவே செய்கிறது.

அதிகாலை செவ்வொளியில் துலங்கும் துறைமுகம் துவங்கி, அரண்மனை இடைநாழி வரை [எறும்புகள் போல ஓடி முட்டிக் கூடி பேசிப் பிரிந்து..] மக்களின் விழாக்கால பரபரப்பு.

சுப்ரதீபம் தயார். அறிஷ்டநேமி எழுந்துவிட்டார். இதோ இவை அளிக்கும் முகமற்ற உவகையுடனும் இன்துயருடனும் இந்த நாள் துவங்குகிறது
 
கடலூர் சீனு