Wednesday, November 25, 2015

ஏழு அம்புகள்

அன்புள்ள ஜெ

மிக விரைவான ஓர் அத்தியாயத்திற்குப்பின்னர் மிக அமைதியான ஓர் அத்தியாயம். ஒன்றும் நடக்கவில்லை. சும்மா அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இடம் முக்கியமானது. ராமனின் அயோத்தி. பழைமைக்கும் புதுமைக்கும் நடுவே ஒரு பாலம். அழிந்துகொண்டிருக்கும் ஒரு நகரம். எழுந்து வரும் ஒரு நகரம். நடுவே ஒரே அம்பில் ஏழு மரம் வீழ்த்தியவனின் கதை. அர்ஜுனனும் அவாறு செய்தவன் தானே?



இந்திரப்பிரஸ்தம் உருவாவதன் கதையும் அதன்பின்னால் உள்ள கணக்குகளும் எல்லாம் ஆச்சரியமானவை. வேறு ஒரு புதியதளம் நோக்கி நாவல்செல்லக்கூடும் என்று நினைக்கவைக்கின்றது. அர்ஜுனன் அறம்பற்றிப்பேசும் இடத்தையும் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்

சாரங்கன்