Saturday, November 14, 2015

இருபாதிப்புகள்

ஜெ சார்

நாவல் முடியப்போகிறது. இதன் அமைப்பு சிக்கலானது. அர்ஜுனனின் பயணங்கள். அதில் அவன் மெல்லமெல்ல ஒரு  ஒரு வீரன் என்ற நிலையில் இருந்து யோகி என்ற நிலைநோக்கிச் செல்கிறான்

அவன் யோகியாக வேடமிட்டுச்சென்று சுபத்திரையைக்கைப்பற்றினான் என்றுதான் கதைகளிலே உள்ளது. அது வெறும் வேடம் அல்ல என்றும் அது அவனுடைய பர்சனாலிட்டியிலே ஒரு பகுதிதான் என்றும் அவன் உள்ளூர ஒரு யோகியாக ஆகிவிட்டிருக்கிறான் என்று நாவலின் இறுதிப்பகுதி சொல்கிறது

அவனுடைய பர்சனாலிட்டியில் கொலைசெய் என்று சொல்கிறவனைப்போலவே கொல்லாமையைச் சொல்கிறவனும் சமானமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான ஒரு கற்பனைதான்

சரவணன்