Thursday, November 26, 2015

அறமெனப்படுவது 2



கூடவே இத்தனை அவதூறுகளுக்குப் பின்பும் காந்தி எப்படி மழுங்கடிக்கப் படதாவராக இருக்கிறார் என்பதற்கும் அந்த வரியே பதில். அதனை மழுப்பல்களுக்குப் பின்பும் அது அதனை தெளிவாக நம் முன் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்ற பொழுது காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு கானொளியில் காந்தி தண்டி யாத்திரையில் நடந்து செல்லும் பொழுது மக்கள் அவரை பின் தொடர்ந்து ஓடி வருவதை கண்டேன்.

அவசரமான ஒரு வேலையாக போவதைப் போல ஓடும் கிழவருக்குப் பின்னால் மக்கள் வயல்களில், வரப்புகளில் என தீப்பிடித்ததைப் போல பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அங்கேயே அவருடைய குரலைக் கேட்க நன்கு ஐந்து தொலை பேசி அலை வாங்கிகளை வைத்திருந்தனர், அதில் எது ஒன்றை எடுத்தாலும் அவருடைய உரையாடல்களை கேட்கலாம், அதில் ஒன்றை எவரோ சரியாக வைக்காமல் விட்டு போக அதிலிருந்து அவர் குரல் அந்த அறையெங்கும் கசிந்து கொண்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து காதில் வைத்த பொழுது ஒன்றை நிச்சயமாக உணர்ந்தேன், இன்று அவர் இருப்பாரானால் அல்லது நான் அவர் காலத்தில் இருந்திருப்பேனாகில் கட்டாயம் அவர் பின்னால் சென்றிருப்பேன் எல்லாவற்றையும் விட்டு விட்டு என.

ஏ வி மணிகண்டன்