Saturday, July 2, 2016

பகடை



அன்புள்ள ஜெ,
பன்னிரு படைக்களத்தின் வரைபடம், ஆடும் முறை, ஆட்ட விதிகள் இவற்றை வெளியிட முடியுமா?

தண்டபாணி

அன்புள்ள தண்டபாணி

அந்த சூதாட்டத்தை தொடர்ச்சியாக பலவகையான குறியிட்டுத்தளத்தில் விரித்தெடுப்பதை நீங்கள் காணலாம். ஒருபக்கம் விதி மறுபக்கம் மானுடமூளைத்திறன் இரண்டும் மோதும் ஒரு களம் அது. கூவே 12 ராசிகள் அமைந்த சோதிடக்களம். பன்னிரண்டு பகுதிகளாக ஆன காலம்.

இதனால் அதை தெளிவாக விளக்குவது தேவையில்லை என தோன்றியது. அந்த புகைமூட்டமே கற்பனைக்கு உகந்தது ஏற்கனவே சகுனிக்கும் கண்ணனுக்குமான சூதாட்டம் நாவலில் வருவதை நினைவுகூரலாம். கூடவே அந்த பகடையை ஆடும் அதே பாணியில்தான் அவன் குழலிசைக்கவும் செய்கிறான் என்பதையும் நினைத்துக்கொள்ளலாம்.

ஜெ