Thursday, July 7, 2016

துர்க்கை



வெண்முரசு பன்னிரு படைக்களத்தை வாசித்து முடித்தபோது பாஞ்சாலி சபதம் காட்சியை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எதிர்பார்த்தேன் என தோன்றியது. ஆனால் பிறகு மீண்டும் ஒரு முறை வாசித்தேன். அடக்கிச்சொல்லுவதே இலக்கியத்துக்கு உகந்தது என நினைத்தேன். வெண்முரசில் இதற்கு முன்னரும் இதேபோன்ற உச்சங்கள் இப்படித்தான் வந்துள்ளன

பாஞ்சாலி துர்க்கை. அவள் மானுடரை அழிப்பேன் என்று சபதம் செய்வது மிகையாக ஆகிவிடும். மற்ற நூல்களில் அவள் எளிய மானுடப்பெண்ணாகவே இருக்கிறாள். ஆகவே இந்த வேறுபாடு. மாயை என்பது துர்க்கையின் தோழி. அவள் வந்து சபதம் செய்வதும் பொருத்தமே. அது துர்க்கையன்னையின் மாயத்தோற்றம்

பீமன் அவ்வளவு பேசியபிறகு பாஞ்சாலி சபதம் செய்வதும் வந்திருந்தால் கூறியதுகூறலாக ஆகிவிடும். மேலும் பாஞ்சாலி இதிலே சொல்லும் ஒருவரியே போதுமானது. அரசனைமுன்னிறுத்தும் தொல்வேத நெறிக்குப் பதிலாக மானுடத்தை முன்னிறுத்தும் கிருஷ்ணனின் நெறி எழுக என்று அவள் சொல்கிறாள்

பலவகையிலும் நுட்பமான இடம்

மாதவன் எஸ்