வேதங்கள்
அன்புள்ள ஜெ,
வெண்முரசின் கடைசிப்பகுதிகள்
இதுவரை வந்த அத்தனை நாவல்களையும் ஒரு முனைநோக்கிக் கொண்டுசெல்கின்றன. இப்போது முதல்நாவலில்
ஆஸ்திகன் வரும் பகுதிகளை மேலும் புரிந்துகொள்ளமுடிகிறது. கீதையின் வெற்றிக்குப்பின்
மீண்டும் பழைய நாகவேதத்தின் நஞ்சுடன் அவன் அஸ்தினபுரிக்கு வருகிறான். நாவலின் இப்பகுதிகளை
கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப்பிறகு எழுதுகிறீர்கள். நாவலை எழுதுவதற்கு முன்னரே இதெல்லாம்
உங்கள் மனதிலே இருந்ததா என்ன?
நாகவேதமும் அசுரவேதமும் ‘வளர்க வெல்க’ என்று சொல்கின்றன.
அப்படித்தான் சொல்லமுடியும். அதுதான் உயிரின் ஆதிவேதம். அதைக் கட்டுப்படுத்தி கரைகட்டியது
நால்வேதம். அதை கடந்து அனைவருக்குமான உயர்வேதமாகிய கீதையை அளிக்கிறான் கண்ணன்.
மகேஷ்