Monday, July 4, 2016

திருதாவின் விழிகள்



நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம்; நலம்தானே? கொட்டும் மழையில் மூதறிஞர் ராஜாஜி குடைபிடித்துக் கொண்டுபோய்க் கலைஞரிடம் மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் எனக்கேட்டதுபோல் திருதராஷ்டிரன் கடைசி வாய்ப்பாய் துரியனிடம் சென்று சூதைத் தவிர்க்க வேண்டியதை அருமையாய்ப் புனைந்துள்ளிர்கள். அதேபோல திருதராஷ்டிரனின் உள்ளுணர்வு பின்னால் சமஞ்சகக் குளக்கரையில் துரியனின் உடல் கிடக்கப்போவதை அவர் இப்போதே “உன்னுடல் காட்டுக்குளக்கரையில் கிடக்கும்” என்று உரைப்பதும்  மாற்றுத்திறனாளிக்கு உள்ள  ஓர் சிறப்பான அறிவைக்காட்டுகிறது

வளவ துரையன்