Friday, July 8, 2016

இரண்டும் ஒன்றாவது





ஜெ

வெண்முரசின் பல நுணுக்கமான இடங்களை அந்நாவல் முடிவுக்கு வந்தபின்ன அவ்வப்போது மனதிலே ஓட்டிக்கொண்டு வாசித்துப்பார்க்கையில்தான் புரிந்துகொள்ளமுடிகிறது. உதாரணமாக, சிசுபாலன் கையில் வைத்திருக்கும் படையாழி. அது யாதவகுலத்துக்கு உரியது. அதற்கு ஒரு தனி வரலாறு உள்ளது. அவன் கையில் அது வரும்போதே அதற்கு தனித்திட்டம் உள்ளது. யாதவ கிருஷ்ணன் கையில் உள்ள படையாழியின் நிழல்தான் அது. கடைசியில் இரண்டும் சென்று கிருஷ்ணன் கையில் ஒன்றாக ஆகின்றன.

உண்மையில் சிசுபாலனை எந்தப்படையாழி கொன்றது. இரண்டும் மாறிமாறிப்பறக்கின்றன. இவன் கையிலிருந்ததே திரும்பி வந்து கொன்றிருக்குமோ என்ற எண்ணம் வந்தது. அப்படி நினைப்பதே ஒருவகையான தத்துவார்த்தமான வாசிப்பை அளிப்பதாக இருந்தது. இரு படையாழிகளும் சென்று ஒன்றன் மேல் ஒன்றாகப்படிந்து ஒன்றாகும் நிக்ழ்வு மெய்சிலிர்க்கவைத்தது. விசிஷ்டாத்வைத வைணவத்தின் சாராம்சமான ஒரு தர்சனம் அது

அனந்த்