Friday, July 8, 2016

தொடர்






அன்புள்ள ஜெ

வெண்முரசின் நாவல்களை தொடராக வாசிக்கும்போது அடுத்தது என்ன என்பதே இழுத்துச்செல்கிறது. ஆயிரம் முறை கேட்ட கதையிலும் அடுத்தது என்ன என்பதை ஊகிக்கமுடியாமலிருப்பது, அல்லது ஊகிக்கச்செய்வது ஒரு பெரிய புனைவுச்சாதனைதான். குறிப்பாகவெய்யோனில் கர்னன் சிசுபாலனைச் சந்திக்கப்போகும்போது என்ன நடக்குமோ என்ற பயமே எனக்கு இருந்தது.

ஆனால் சந்தித்து சிசுபாலன் அவனை தன் அண்ணனாக ஏற்றபோது நிறைவும் நெகிழ்ச்சியும் வந்தது. ஆனால் பிறகு நினைத்துக்கொண்டேன். உண்மியில் மகாபாரதத்திலே அப்படித்தானே இருக்கிறது. சிசுபாலன் கர்ணனின் நண்பர்தானே? அப்படியென்றால் என்ன பதற்றம் ஏற்பட்டது என்று? அதை பழைய கதையாக அல்லாமல் நிகழும் புதிய கதையாக ஆக்கிவிடுகிறீர்கள். அதுதான் காரணம் என நினைக்கிறேன்

மகாதேவன்