Saturday, July 2, 2016

இரு உரைகள்



 

 

அன்புள்ள ஜெமோ, 

 

இரு உரைகள் இந்நாவலிலே முக்கியமானவை. ஜராசந்தனிடம் கிருஷ்ணன் பேசுவது. சிசுபாலன் வதைப்படலத்தில் பேசுவது. ஓர் அரசாங்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்காக பல்லாயிரமாண்டுகளாக உருவாகி வந்த ஞானவியலை வேதம் என்கிறோம். ஆனால் அதைச்செதுக்கி கூர்மையாக்கி பேரறத்தையும் தனிமனித விடுதலையையும் நோக்கிய ஒரு ஞானத்தை முன்வைப்பதையே வேதாந்தம் என்கிறோம். ஞானவியலில் அது ஒரு பெரிய பாய்ச்சல். சுவாமி சித்பவானந்தர் வேதாந்தத்தை புரட்சி என்றே சொல்வார். அதையே வெண்முரசும் முன்வைக்கிறது என நினைக்கிறேன். மிகக்கூர்மையான பகுதிகள் இவை. இவற்றைப்பற்றிய விவாதங்களே மேலும் புரியவைக்கும்

சண்முகம்