Friday, July 1, 2016

கதையடுக்குகள்.



 

 

வெண்முரசு நாவல்களில் பன்னிரு படைக்களம் தனித்துவத்துடன் உள்ளது. இதுவரை வந்த நாவல்களில் இது மிகச்செறிவானது. ஒரே அத்தியாயத்திலேயே நிறைய நிகழ்ச்சிகள்.பல கதையடுக்குகள். ஒன்றுக்கொன்றாகப்பின்னிச்செல்லும் கதையோட்டம். உண்மையில் நாவல் முடிந்தபின்னர் ஆரம்பத்திலிருந்தே நினைத்துப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு கதை. ரம்பகுரம்பன் வழியாக மகிஷாசுரன் வரை ஒரு கதை. அதன்பின் மகாபாரதத்தின் கதை. அந்தக்கதைகளும் இந்தக்கதைகளும் ஒன்றுடன் ஒன்று நுட்பமாகப்பின்னிக்கிடக்கின்றன. எத்தனை வாசகர்கள் அந்த பின்னல்களை நீவி சிடுக்கெடுத்து வாசித்திருப்பார்கள் என்பதெல்லாம் ஆச்சரியத்துக்குரிய கேள்விகள்தான். நான் ஆரம்பம் முதலே இப்போது வாசித்து தொகுத்துக்கொண்டிருக்கிறேன்

 

ராஜாராமன்