அன்புள்ள ஜெ,
வெண்முரசின் விரைவான
நாவல்களில் ஒன்று எழுதழல். மொத்தமாக இதற்கு ஒரு வடிவம் வந்துவிட்டது. இது பாண்டவர்கள்,
யாதவர்கள், கௌரவர்களின் மைந்தர்களின் கதை. அல்லது அவர்களின் பார்வையில் சொல்லப்படும்
கதை. அவர்கள் அனைவரும் தந்தையரைப்போல இருக்கிறார்கள். தந்தையரிலிருந்து வேறுபாடு கொள்கிறார்கள்.
ஆனால் கிருஷ்ணனின் வாரிசுகள் அவருடைய அருங்குணங்கள் ஏதுமில்லாமல் இருப்பதும் அழிவதும்தான்
உண்மையிலேயே பெரிய துயரம். கிருஷ்ணனின் கதையில் இந்த மகத்தான துயரம் இருந்துகொண்டே
இருக்கிறது. ஆனாலிங்கே அது பேசப்படுவதில்லை. குழந்தைக் கண்ணனும் காதலன் கண்ணனும்தான்
அனைவரும் அறிந்த வடிவங்களாக இருக்கிரார்கள் என நினைக்கிரேன்
சத்யமூர்த்தி