ஜெ
இன்றைய வெண்முரசில்
சதானிகனும் தம்பியும் பேசிக்கொள்ளும் இடம் அந்த இடத்திற்கான தேவையையும் மீறி அசாதாரணமான
ஒரு விஷயத்தைச் ச்சொல்கிறது. உபமானம் என்பது ஒரு தரிசனம், அது ஓர் இலக்கிய அணி அல்ல.
வைசேஷிகம் முதலிய மரபுகளில் உபமானம் பிரத்யட்சம் அனுமானம் சுருதி ஆகியவற்றுக்கு சமானமான
ஒரு பிரமாணமாகவே சொல்லப்படுகிறது. அதை சதானீகனும் சொல்கிறான் நேர்க்காட்சி, உய்த்தல், முன்கூற்று என்னும் மூவகை அறிவடிப்படைகளில் சிக்காது எஞ்சுவதை அறிவதற்கானது அது என்று நுண்சிறப்பு தத்துவத்தோர் கூறுவார்கள்”. வைசேஷிகத்துக்கு
நுண்சிறப்புத்தத்துவம் என்ற மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. ஒரு நல்ல உபமானம் என்பது
இரு ப்ரபஞ்ச வியவஹாரங்கள் நடுவே ஒரு சமானத்தன்மையை கண்டுபிடிப்பது. ஒன்றை வைத்து இன்னொன்றை
விளக்குவது. இரண்டிலும் அந்தர்யாமியாக உள்ள சத்யமே அப்போது வெளிப்படுகிறது
சுவாமி