Friday, November 10, 2017

ஆணவம்



நான் சால்வனை வென்ற கதையைப்பாடாமல் அங்கே ஒரு குழவிகூட இரவுறங்குவதில்லை என்று பிரத்யும்னன் சொல்கிறான். அவன் சொல்வது அபிமன்யூவிடம். பிரத்யும்னன் கண்ணிமைப்பதற்குள் அவனை கொன்றுவீச ஆற்றல் கொண்ட மாவீரனிடம். அவனோ அனைத்தையும் உணர்ந்து தான் வெறுமொரு துளிதான் என்று தெளிந்து அடக்கம் கொண்டு அமர்ந்திருக்கிறான். இந்த வேறுபாடுதான் அந்த அத்தியாயத்தின் சாராம்சம் என நினைக்கிறேன். ஆணவம்தான் பிரத்யும்னனை கண்ணனிடமிருந்து பிரிக்கிறது. தன் ஆற்றலை மிக நன்றாகவே உணர்ந்திருந்தாலும்கூட அபிமன்யூகண்ணனின் காலடியில் ஆணவத்தை முழுமையாகவே கழற்றிவைத்துவிட்டு அமர்ந்துகொள்ள அவனால் முடிகிறது. ஆகவே அவனுக்கு ஞானம் அமைகிறது


சாரங்கன்