அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,எழுதழல் -கண்ணனுக்காக அனைவரும் எழுகின்றனர்-அபிமன்யூ,தருமர்,சாத்யகி,சுருதகீர்த்தி என்று எதிர்பாரத பாத்திரங்கள் தழல் கொண்டு எழுகின்றனர்.
கிருஷ்ணன்-பாணன் யுத்தம்-தொன்மத்தின் படி பாணனுக்கு சிவன் போரில் உதவ,கண்ணன் சிவனை வென்று பாணனின் கரத்தை அறுப்பார்,வெண்முரசில்-13 ஆண்டுகள் இருள் தவத்தில் இருந்து
மீண்டு வந்து பாணனை வெல்கிறான் கண்ணன்,இதை கண்ணன் 13 ஆண்டுகள் பாசுபத விரதத்தை மேற்க்கொண்டு சிவனின் அன்பை வென்றதாய் வைத்துக்கொள்ளலாம் அல்லவா?;
உபபாண்டவர்கள்-இவர்களின் நிலைகள் காணும் போது எங்கோ நான் அனுபவித்தது போல் தோன்றுகிறது,அவர்களுடன் என்னை relate செய்துக்கொள்ளமுடிகிறது,தனக்கு முதன்மை இடம் வேண்டும்
என்று நினைக்கும் பிரதியவிந்தன்,தந்தையின் அன்புக்காக ஏங்கும் சுருதகீர்த்தி,
அபிமன்யூ -இந்த பாத்திரம் நாம் கண்டு வியக்கும் அல்ல அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடும் character,பிரம்பலன் அபிமன்யூவை பற்றி எண்ணுவது போல
.நடிகனை போல யாருக்கு என்ன தேவையோ அதை கூறுபவன்,அனைவரையும் பழகிய சில நொடிகளில் தனக்காக செயல்படவைப்பவன்,எனக்கும்
இப்படி ஒரு நணபன் உண்டு,அவன் எனக்கு மட்டுமே உயிர்தோழன்,என்னக்காக எதையும் செய்வான் என்று எண்ணி யிருந்தேன்,ஆனால் பின்புதான் கண்டுக்கொண்டேன் அவனுடன் பழகுவர்கள் அனைவருமே
என்னை போலவே அவனை நினைக்கின்றனர்,அவன் யாருக்கும் எதுவும் செய்யமாட்டான்,ஆனால் அனைவருமே அவனுக்காக எதைவேண்டுமானாலும் செய்வர் என்று,
அபிமன்யூ போல இருக்க இந்த video யூஸ் ஆகும்னு நினைக்கிறேன் இதை யாராவது try செய்து பாருங்கள்
இப்படிக்கு
குணசேகரன்