Sunday, November 12, 2017

மதுரா



ஜெ

சர்வதனும் யௌதேயனும் செய்யும் அந்தப்பயணம் மீண்டும் வெண்முரசு தொடங்கிய நாட்களை நோக்கிக் கொண்டுசென்றது.  நான் வெண்முரசில் மிகமிக விரும்பியது அதிலிருந்த அற்புதமான காட்சிவர்ணனைகள்தான். காடுகள் நகரங்கள். அதிலும் வெவ்வேறுவகையான நகாங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றிக்கொண்டே இருந்ததை இன்று நினைத்தாலும் கனவு போல உள்ளது.கடைசியாக பாணாசுரரின் நகரம் வரை எத்தனை வகையான நகர அமைப்புகள். எவ்வளவு விதவிதமான கோட்டைகள்.

மதுராவை பலமுறை ‘நேரில் பார்த்திருக்கிறேன்’ இப்போது வாசிக்கையில் மீண்டும் மதுராவுக்குச் சென்ற அனுபவம் ஏற்படுகிறது. சொந்த ஊருக்கே திரும்பி வருவதுபோல. ஆனால் அதேசமயம் இனிமையான நினைவாக மதுரா இருந்ததே இல்லை. எல்லா நிகழ்ச்சிகளும் அங்கே பதற்றமாகவே நடந்தன என்பதும் நினைவ்க்கு வருகிறது

மனோகரன்