ஜெ
ஒவ்வொன்றாய் தொட்டெண்ணி
எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிரும் பரம் என்பது நாராயணகுருவின் வரி. தெய்வதசகத்தில்
உள்ளது. நான் இளமைமுதலே எங்கள் வீட்டில் பாடுவது. நாங்கள் மலையாளிகள். சேலத்தில் செட்டில்
ஆகிவிட்டோம். வெண்முரசில் அந்த வரியை வாசிப்பது மனநிறைவை அளிக்கிறது. நகுலனின் மகனாகிய
சதானிகனிடம் குரு சொல்கிறார்
ஒவ்வொரு முறை வேண்டுகையிலும் உங்களில் எழும் சொற்களை
உள்ளிருந்து விலக்குக! அச்சொற்கள் ஏந்திய விழைவும் துயரும் உடன்விலகுவதை காண்பீர்கள்.
ஒவ்வொன்றாக விலக்கிச் செல்கையில் எஞ்சிடும் வெறுமையே பரம்
ஸ்ரீதர்