அன்புள்ள ஜெ
உபபாண்டவர்களில் கடைசி
ஜோடி அறிமுகமாகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் இருக்கிறார்கள். அது சொல்லப்படவில்லை,
ஆனால் தெரிகிறது. முக்கியமாக சதானீகன் ஒரு கவித்துவமான மன அமைப்புடன் இருக்கிறான்.
அந்தக் குணத்தை பிறரில் இதுவரை காணமுடியவில்லை. சிந்தனையின் கூர்மை சுருதகீர்த்தியில்
இருக்கிறது. தீவிரமான பக்தியும் உள்ளது. யௌதேயனிடம் வருவதை உணரும் கூர்மையும் சூழ்ச்சித்திறனும்
உள்ளது. பிரதிவிந்தியன் ஒப்புநோக்க அப்பாவியாக இருக்கிறான். அவர்களில் சதானிகனின் கதாபாத்திரம்
மட்டுமே அந்தப்பிரபஞ்சத்தன்மையை உணர்கிறது என நினைக்கிறேன். இன்று அவன் சொல்லற்ற தியானத்தைப்பற்றி
உணர்வதும் அவன் கொள்ளும் மன எழுச்சியும்
குதிரைகளைப்பற்றி நகுலன் அவனிடம் சொல்வதும் எல்லாம் சிறப்பாக இருந்தன
ஜெயராமன்