ஜெ
திரௌபதியின் அந்த ஆழ்ந்த மனநிலையை என்னால்
புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வாசகர் எழுதியதுபோல அவள் கிருஷ்ணை அளித்த அந்த பட்டை
திரும்பக்கொடுக்கவில்லை. அன்றுமுதல் அவள் அணிந்த அத்தனை ஆடைகளும் கிருஷ்ணை
அளித்ததுதான் என்று அவள் உணர்கிறாள். அதைத்தான் திரும்பக்கொடுக்கிறாள். அது
கண்ணனுக்கே திரும்பக்கொடுப்பதுதான் என்பதே அவள் மனநிலை. அரசியாகவோ அன்னையாகவோ அல்ல
பெண்ணாக அதைக்கொடுக்கிறேன் என அவள் சொல்லும் இடம்தான் முக்கியமானது என
நினைக்கிறேன்
செல்வராஜ்