Saturday, January 20, 2018

வன்முறை



அன்புள்ள ஜெ

குருதிச்சாரலில் நான் காண்பது ஏற்கனவே மன அளவில் தொடங்கிவிட்ட போரைத்தான். கடுமையான கசப்புகள். கோபங்கள். வெறிகள். விலங்குகள் போல மாறி மாறி கடித்துக்கிழிக்கிறார்கள். அம்மா மகன்களை பாஸ்டர்ட்ஸ் என்று திட்டுகிறாள். மகன் அப்பாவை துறக்கிறான். ஒருவருக்கொருவர் கொண்டிருந்த எல்லா நல்ல உறவுகளும் கசந்துபோகின்றன. அதன்பின் கொல்வதும் சாவதும்தான் எல்லாருக்குமே நல்லதோ, ஒரேயடியாக எல்லாவற்றையும்  முடிவுசெய்துவிடலாமோ என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அந்த வன்முறையை அத்தியாயம் தோறும் பார்க்கிறேன். உச்சகட்ட வன்முறை மானுட மனத்துக்குள்ளேதான் நடக்கமுடியும் என தோன்றுகிறது


ஜெயராமன்