Sunday, January 21, 2018

உச்சகட்ட வன்முறை



அன்புள்ள ஜெ

உச்சகட்ட வன்முறை மனதுக்குள் நிகழ்வதைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அது உண்மை. மகாபாரதத்திலேயே அது உள்ளது. ஆனால் அது போர் தொடங்கியபிறகு மெல்ல மெல்ல உருவாகிறது. போருக்கு நடுவே பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் ஏசிக்கொள்வதும் பயங்கரமாக இருக்கும். யுதிஷ்டிரரைக்கொல்ல அர்ஜுனன் வில் எடுக்கும் காட்சிகூட உண்டு. வெண்முரசில் அதை திடீரென கொண்டுவராமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கிறீர்கள். இப்போது துரியோதனனும் குந்தியும் போல உச்சங்களில் நிற்பவர்களே அப்படீ இருக்கிறார்கள். போரில்ம் கிருஷ்ணனே நிலைமீறி ஆயுதம் எடுக்க தயாராகிறான். அந்த உச்சம் வரை இந்த வன்முறையும் கசப்பும் சென்று சேரும் என நினைக்கிறேன்


பாஸ்கர்