Tuesday, January 30, 2018

பிரம்மாண்டம்



திருக்குறளில் இடம்பெறாத தமிழ்ச் சொற்கள் என்று ஒரு பட்டியல் இடுவது சாத்தியம். தாங்கள் பயன்படுத்தாதச் சொல் என்று தமிழில் இன்னும் ஏதேனும் மிச்சம் உள்ளதா என்ன!


விமர்சிக்க தகுதி இல்லை. தங்களின் பிரம்மாண்டம் காண்கையில் அதைக் கற்றுத் தேரவும் இந்த ஒரு பிறவி போதுமா, பிரம்மிக்கிறேன். உங்களின் வார்த்தை தூரிகை என் உள்ள  நிகண்டில் தீட்டிய மஹாபாரதம், வெண்முரசின்  நாதமாக அதிர்ந்து அதிர்ந்து ஆண்மாவில் அல்லவா கலந்துரைகிறது. நிகழ்வோ கற்பனையோ, வார்த்தைக் கொண்டு தாங்கள் வடித்த இந்த காவியம், வர்ணிக்கும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. மாலைக்கும் மகுடங்களுக்கும் இடையில் இந்த ஒற்றை மலர் தங்களின் கவனம் பெறுமா?! நான் அறியேன்.


எந்தப் பிறவியிலோ பெண்ணாய்ப் பிறந்து வாழ்ந்ததை மறவாமல் இருக்கிறீரா?, இல்லை கூடு விட்டு கூடு பாய்ந்து பெண்உடலில் வசித்து வந்தீரா? மூச்செல்லாம் பேச்சாக்கி சொல்லி சொல்லி மாய்ந்தாலும், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளும் யாரும் இங்கில்லை. இவ்வளவு நுணுக்கமாக அவள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எப்படி உணர்ந்தீர்.ஆண் உருவில் பெண்மையும் விழித்துக் கொண்ட தாயுமானவரா, இல்லை சக்தியும் சிவனும் சம்ப்பட்ட அர்த்தநாரியா?!.
சிந்தனை சிதறலோ, சேர்த்து தொகுத்த முத்தாரமோ இல்லை இது. வெண்முரசு ஒரு நிகழ்வு. நிலம் அணைத்தும் அனலின் ஆடையே என்றாலும், எரிமலை ஆவது உகந்த சில இடங்களே. வெண்முரசு தங்களுக்கு நிகழ்ந்தது. மேலும் மேலும் இவ்வண்ணம் நிகழ வேண்டுகிறேன்.

பிரம்மிப்போடும்
வணக்கத்தோடும்
கீதபிரசன்னா.