Sunday, January 28, 2018

தம்மதென்று



ஜெ,

துச்சளையினால் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன இதுவரை, அவள்தான் அஸ்தினபுரியின் வராஹி. இன்று நிகழ்பவை அனைத்தும் கர்கர் நீங்கிய போதே துவங்கி காத்திருந்தவை. அவள் நீங்கிய பின்பு எல்லாமும் குரூரமாகி விடுகிறது. போருக்குப் பிந்தைய குருஷேத்ரத்திற்கு ஒரு prelude போல. அப்பால் இருந்து கலி காத்துக் கொண்டு இருந்திருக்கின்றான். 

எரிச்சலுடன் தன் உடலில் மொய்த்த ஈக்களை விரட்டியபின் “நம் இடத்துக்கு ஏன் இந்த மானுடர் வருகிறார்கள்?” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு? என கிருங்கனும் லோமசனும் பேசிக் கொண்ட போது சிறு வயதில் படித்த இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.





"பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !” 


ஏ.வி.மணிகண்டன்