Tuesday, January 30, 2018

பானுமதியின் கதை


அன்புள்ள ஜெ

பானுமதியின் கதை வரும்போதே எப்படியோ அம்பையின் கதையாக அது விரியும் என எதிர்பார்த்திருந்தேன். ஏனென்றால் போர் எழப்போகிறது முதற்கனல்தான் எழுந்தழல். ஆகவே அம்பை எப்படி எழுவாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். காசியிலிருந்து அவளுடைய குர்தி மரபிலிருந்து அம்பையின் கதை ஆரம்பிப்பது எதிர்பார்த்திருந்தாலும் பரபரப்பை ஏற்படுத்தியது

அம்பையின் வடிவமாக காசியில் எப்போதும் ஒரு பெண் இருந்துகொண்டிருக்கிறாள். பானுமதியின் அத்தை சியாமளையின் குணச்சித்திரம் அம்பையின் வடிவம்தான்

பானுமதியின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே அன்பான, அதேசமயம் ஆழமான சிந்தனைகள் இல்லாத, குடும்பப்பெண் மாதிரித்தான் இருந்தது. எந்தக்குடும்பப்பெண்ணுக்கும் இத்தகையச் சந்தர்ப்பத்தில் வரும் பிளவுண்ட நிலையும் தடுமாற்றமும்தான் அவளிடமும் தெரிகிறது

ராஜசேகர்