Saturday, January 27, 2018

காசுவெட்டுதல்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு 


காலை வணக்கங்கள் .


இன்றைய குருதி சாரலில் துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரர் அவர்களை துறந்து ,தன்னை கலிதேவனுக்கு முற்றொளிக்க போகிறார் .இது ஊழின் விருப்பம் .இன்றும் இத்தகைய சடங்குகள் குறிப்பிட்ட பிரிவினர்களிடம் உண்டு.  தந்தை  - மகன் ,சகோதர /சகோதரிகளிடம் பிணக்கம் வரும் பொழுது ,குறிப்பாக சொத்து பிரச்சினையில் தகராறு /பெண் கேட்டு கொடுக்காவிட்டால் ஏற்படும் மனஸ்தாபங்கள் ஆகியவற்றால் வாய்த்தகராறு /வரப்பு தகராறு என நீண்டு பின்பு வெட்டு குத்து என போலீஸ் கேஸில் முடியும் .அப்படியும் மனம் ஆறாத சொந்தங்கள் காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் ஆற்றும் எதிர் வினை தான் காசை வெட்டிப்போடுதல்  - ஆம் பத்து பைசா நாணயத்தை அரிவாளால் வெட்டி உண்டியலில் போடுவது .


இது பத்திரகாளியம்மன் கோவிலில் பூசாரி முறைமைகள் சொல்லி செய்வது .இது செய்வினை அல்ல .எந்த பிறவியிலும் பிரிந்த சொந்தங்களை சென்று  சேர மாட்டேன் என்று பத்திரகாளியம்மன் சன்னதியில் சத்தியம் செய்வது .இதை முடிந்தமட்டும் பூசாரிகள் சமாதானம் செய்ய முயற்சித்து ,முடியாத பட்சத்தில் சொந்தங்களின் பேரை சொல்லி காசை இரண்டாக பிளப்பார்கள்.இதில் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் இப்படி வெட்டிப்போட்ட சொந்தங்கள் மனஸ்தாபங்கள் நீங்கி மீண்டும் ஓன்று சேர்ந்தால் அது காசு வெட்டிபோட்டவரை பாதிக்கும் .அவர் தெய்வ நிந்தனையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் .இங்கு துரியோதனன் செய்யும் சடங்குகளும் அதே போன்றது .அதில் காசுக்கு பதில் தன்னையே இரண்டாக பகுத்து விடுகிறான் .இனி அவன் திருதராஷ்டிரன் மைந்தன் அல்ல .கலியின் மைந்தன் .குந்தியின் வாக்கு பலித்தம் ஆகிவிட்டது . நன்றி ஜெயமோகன் அவர்களே 


முனைவர் தி செந்தில் 


ஸ்ரீவில்லிபுத்தூர் 
 - ONE MORE KIND INFORMATION 16 -1 -2018 தை அமாவாசை அன்று சதுரகிரிமலைக்கு - சுந்தரமஹாலிங்கம் கோவில் சென்றேன் .வண்டிப்பண்ணை முதல் சங்கிலி பாறை வரை படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளன .போக மூன்றரை மணி நேரம் வருவதற்கு இரண்டரை மணி நேரம் ஆனது .