Monday, January 29, 2018

அழியாத தொடர்ச்சி



ஜெமோ சார்,

வெண்முரசின் இப்பகுதி பதற்றத்துடன் வாசிக்க வைக்கிறது. அதோடு பழைய கதைகளின் தொடர்ச்சிகள் வந்துகொண்டே இருந்தன. கலிதேவனின் ஆலயத்தில் இருக்கும் அந்த நரிகள் எப்போதும் அங்கேயே இருந்துகொண்டிருப்பவை. அவற்றுக்கு சாவே இல்லை. அதே பெயர்கள். அதே தோற்றம். அவற்றில் மூத்தவன் சிறிய தம்பிக்குச் சொல்லும் வாழ்க்கைத்தத்துவம் அருமையான கவிதை. என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை என்று அவன் சொல்லுமிடத்தில் புனைவு கவிதையாக ஆகிவிட்டது. அவை முன்னால் வந்த இடத்தை தேடிச்சென்று வாசித்தேன். அந்த அழியாத தொடர்ச்சி பிரமிப்பூட்டியது.



ராம்குமார்