Monday, January 22, 2018

ஒரு கேள்வி




அன்புள்ள ஜெ

ஒரு கேள்வி எனக்கு மிச்சமிருந்தது. பிருந்துமதி மனம் கொந்தளிப்பது குலத்தைப்பற்றி பீமன் சொன்னதனால். ஆனால் கரேணுமதி ஏன் சபையில் மயங்கி விழுந்தாள்? ஏன் அவள் எழுந்திருக்கும்போது மனம் பேதலித்திருந்தாள்? அவளுடைய பிரச்சினை உண்மையில் என்ன?

அவள் கிருஷ்ணனை நேருக்குநெர் பார்த்தால். விழுந்துவிட்டாள். கிருஷ்ணனில் அவள் என்ன அப்படிப்பார்த்தாள்? நான் என்ன நினைகிறேன் என்றால் க்ருஷ்ணனும்  சிசுபாலனும் சமம். சிசுபாலனாகவேஅவள் கிருஷ்ணனைப்பார்த்தாள் என்றுதான்


ராஜசேகர்