Tuesday, June 12, 2018

அசங்கன் 2




ஜெ

அசங்கன் என்றால் சங்கை இல்லாதவன் என்றுபொருள். அதாவது கவலைப்படாதவன், அஞ்சாதவன் என்று. ஆகவே அவனுடைய அந்தக்கண்ணீர் பயத்தினால் அல்ல. அவன் எங்கேயுமே பயந்ததாகக் தெரியவில்லை. அவனுக்கு எல்லாமே தெரியும். தந்தையின் குறைபாடுகளும் பதற்றங்களும் தெரிந்திருக்கிறது. அவன் தந்தையைவிட நுட்பமானவன். தந்தையைவிடவும் இளைய யாதவருக்கு அடிமைப்பட்ட மனம் கொண்டவன். தந்தையைவிட எல்லாவற்றையும் எதிர்கொள்கிறான். ஆகவே அவனுடைய கண்ணீர் என்பது அந்தத்தருணத்தில் உருவான மன எழுச்சியினால்தான். அந்த இளவரசியை மணக்கநேர்ந்தமையால் அல்ல. ஏனென்ரால் அவளை அவனுக்குப்பிடித்திருந்தாலும் பெரிய அளவில் அவன் கொந்தளிக்கவில்லை. பெரிய பாக்கியம் என நினைக்கவுமில்லை. அவனுடைய மனம் அந்தத்தருணம் ஒரு உச்சநிலை என்று புரிந்துகொண்டது. அந்தக்கண்ணீரை விளக்கிவிடமுடியாது என்றுதான் நினைக்கிறேன்

ராமச்சந்திரன்