Tuesday, June 12, 2018

மாயையின் நகர்நுழைவு





ஜெ


மாயையின் நகர்நுழைவு உபப்லாவ்யத்தில் ஏதோ ஒரு அலையை உருவாக்கப்போகிறது என நினைத்தேன். ஆனால் ஒரு கெட்ட விஷயம் நடைபெறுவதுபோல ரகசியமாக அவள் அவைநுழைந்தது ஆச்சரியமாக இருந்தது. அவள் திரௌபதியின் வடிவம். அந்த வஞ்சத்தைக் காத்து வைத்திருப்பவள். அதிலேயே வாழ்பவள். ஆனால் அதுவும் சரியாகவே இருந்தது. அவளுடைய அந்த வஞ்சத்தை கொற்றவைக்குரிய ஒரு ராஜச குனமாக நீங்கள் காட்டவில்லை. அது ஒருவகையான தமோகுணமாக, அசிங்கமாக, கொடூரமானதாகவே காட்டுகிறீர்கள். அதுவும் கொற்றவைதான். ஆனால் காளரூபம். அது தெய்வீகம்தான். ஆனால் அதற்கு நம்முடைய மனம் ஒப்புவதில்லை. ஜேஷ்டாதேவி போன்ற துர்தேவிகளை நாம் கொல்லைப்பக்கம் வைத்துத்தானே வழிபடுகிறோம்? மாயை வந்தது அங்கே உபப்லாவுயத்தில் இருந்த அனைவருக்குமே பெரிய ஒரு கசப்பையும் சஞ்சலத்தையும்தான் உண்டுபண்ணியிருக்கும் என நினைக்கிறேன்


மகேஷ்