Tuesday, June 26, 2018

தலைமுறைகளுக்காக வாழ்தல்




வரும் தலைமுறைகளுக்காக நான் ஒரு கணமும் வாழ்ந்ததில்லை என்று பால்ஹிகர் சொல்லும் வரி மிக முக்கியமானது. என்னை ஒருகணம் அசைத்துவிட்டது அந்த வரி. முதலில் தோன்றும், நாமெல்லாம் அவரைப்போலத்தான். வருந்தலைமுறைகளுக்காக வாழ்பவர்கள் காந்தி நேரு நெப்போலியன் போன்றவர்கள்தான் என்று ஆனால் அது உண்மை அல்ல. அத்தனைபேரும் வாழ்வதும் வருந்தலைமுறைகளுக்காகத்தான். தன் குடும்பம் குழந்தைகள் வழியாக வருந்தலைமுறைக்காகவே வாழ்கிறார்கள். பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். நல்ல நிலைமைக்குக் கொண்டுசெல்ல இரவுபகலாக உழைக்கிறார்கள். சேத்து வைக்கிறார்கள். நாம் செய்வது எல்லாமே வருந்தலைமுறைகளுக்காகத்தான். நாம் அர்த்தம் என்று நினைப்பதெல்லாமே வருந்தலைமுறைகளுக்காக எதையாவது செய்யும்போதுதான். ஒரு இளமை வயசுக்குப்பின்னால் நாம் நம் சுகத்துக்காக எதையும் செய்வதே இல்லை என்றுகூட நினைக்கிறேன். ஒருவர் வருந்தலைமுறைக்காக வாழ்ந்ததே இல்லை என்றால் அவருடைய வாழ்க்கையே வேறு. அதன் அர்த்தங்கள் முற்றிலும் மாறுபட்டவை. அதைத்தான் அவர் சொல்கிறார். அர்த்தம் என்றால் என்ன என்று கேட்கிறார். பூரிசிரவஸ் சொல்லும் எந்த அர்த்தமும் அவருக்குப்பிடிகிடைக்கவுமில்லை


ஆர் மூர்த்தி