Sunday, June 17, 2018

இருவர்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் வேகமான நாவலாக இது உருவாகி வருகிறது. ஒரு கதைமுடிந்ததுமே ஒரு சின்ன விடுபடலுக்குப்பின் அடுத்த கதை தொடர்வதுதான் வெண்முரசில் வழக்கம். இந்நாவலில் தொடர்ச்சியாக கதை கொந்தளித்துச்சென்றுகொண்டே இருக்கிறது. பூரிசிரவஸ் வருவான் என நான் நினைக்கவில்லை. துரியோதனனின் சபைதான் வரும் என நினைத்தேன். ஆனால் பூரிசிரவஸ் வந்ததுமே அதுதானே சரியாக இருக்கும் என்று தோன்றியது. சாத்யகியும் பூரிசிரவஸும் ஊழால் சேர்த்துக்கட்டப்பட்டவர்கள் அல்லவா? இளைஞனாகிய பூரிசிரவவசை இப்படி முதியவனாக, மக்கள் வளர்ந்து அரசப்பொறுப்பு கொண்டவனாகப் பார்ப்பது ஒரு வித்தியாசமான் அனுபவமாகத்தான் இருக்கிறது

செல்வன்