Thursday, June 21, 2018

பிரதிஷ்டைகள்



ரஃதபோஜை அன்னையின் கதையில், காரியின் குலப்பாடகன் கூறும் வரிகள்..

"வெறுமனே தெய்வங்களை நிறுவ இயலாது, வணிகரே. ஏழு வகை பதிட்டைகள் உள்ளன என்பார்கள் வைதிகர். பூசகர் சொல்பதிட்டையும் நீர்ப்பதிட்டையும் செய்வர். தொல்முனிவர் மூச்சுப்பதிட்டை இயற்றுவர். முதுபூசகர்களின் பொறிப்பதிட்டையும் மூதன்னையர் அன்னப் பதிட்டையும் உண்டு. பெருந்தெய்வங்களுக்கு உயிர்ப்பதிட்டை செய்வது தொல்வழக்கம். குருதிப்பதிட்டை கொடுந்தெய்வங்களுக்குரியது. எந்த வகையில் பதிட்டை செய்யப்படவேண்டும் என அத்தெய்வமே ஆணையிடவேண்டும் என்றான்.

ஈஷாவில்  தியானலிங்கம் 
ப்ராணப்ரதிஷ்டை செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் அங்கு நடந்த அனைத்து பிரதிஷ்டைகளும் அவ்வாறே.
தியானலிங்கம் தவிர , மற்றனைத்திலும் நான் கலந்து கொண்டுள்ளேன். ஆகம முறை ப்ரதிஷ்டைகளையே கண்டிருந்த எனக்கு, இம்முறை விளக்கவொண்ணா அனுபவமாயிருந்தது.

சத்குரு இதைப்பற்றி கூறியுள்ளார். இது பாரதத்தின் தொன்மையானதொரு முறையென்றும், 
இவ்வாறு ப்ரதிஷ்டை செய்துவிடின், அதன்பின் குடமுழுக்கோ, வேறுவகை சடங்குகளும் தேவையில்லை.பல்லாயிரம் வருடங்கள் சக்திநிலை அவ்வாறே இருக்கும். 


வெண்முரசின் வீச்சு தான் எத்தகையது! பாரதமெனும் பேராலமரத்தின் அனைத்து வேர்களையும் நுண்ணிதின் காட்டுகிறது.


அன்புடன்,
மகேஷ்.
(காங்கோ).