Monday, June 25, 2018

குதூகலம்




ஜெ

பெரிய நிகழ்வுகளேதுமில்லாமலேயே சில அத்தியாயங்கள் ஒருவகையான திளைப்பை உருவாக்கிவிடும். அவ்வகையில் இன்றைய அத்தியாயம் முக்கியமான ஒன்று. பால்ஹிகரின் குணச்சித்திரம் மெல்லமெல்ல மாறுவதும் அவருடைய சித்தம் பிறழ்ந்து அவர் சிரிக்க ஆரம்பிப்பதும் எதிர்பார்த்தவை அல்ல. ஆனால் அவை நிகழும்போது அப்படித்தானே நிகழும் என்றும் தோன்றியது.

உயிருடனிருப்பவருக்கே பலிபூசனை செய்யப்படுவதும் அவரே வந்து அந்த பலிபூசனைச் சாதத்தைச் சாப்பிடுவதுமெல்லாம் ஒரு மேஜிக்கல் ரியலிசக் கதைபோலவே தோன்றுகின்றன. அதில் ஒரு புரிந்துகொள்ளமுடியாத குதூகலம் இருக்கிறது. மேஜிக்கல் ரியலிசம் என்பதே play of impossible possibilities என்பார்கள். அந்த விளையாட்டு அருமையாக வந்துள்ளது இந்தப்பகுதிகளில்

ரவிச்சந்திரன்