Saturday, June 9, 2018

மாற்றுரு




ஜெ

சாத்யகியை இளைய யாதவர் ஏன் இந்திரப்பிரஸ்தத்திற்கு அனுப்பினார் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் அதை நினைத்துக்குழப்பம் அடைகிறான். அவன் சென்று மாயையைக் கூட்டிவருவது வரை அனைத்தையும் அவரே ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் அவனை அனுப்பியிருக்கிறார். அது மாயை அவனைப்பார்க்கையில் வெளிப்படுகிறது. ஆனால் அவன் அதைப்புரிந்துகொள்ளவுமில்லை

அவன் பேசியதுமே அவ்ன்குரலை மாயை இளைய யாதவரின் குரலாகக் கேட்கிறார். அவனையே இளைய யாதவர் என நினைக்கிறார். சாத்யகி இளைய யாதவரின் முகம். அவருடைய மினியேச்சர். அந்த அடையாளம் கிடைத்தாலொழிய மாயை கிளம்பமாட்டார். ஆகவேதான் அவனிடம் செல்லும்படி இளைய யாதவர் சொல்லியிருக்கிறார். அந்த இடம் வாசித்தபோது மெய்சிலிர்ப்பதுபோலிருந்தது

ராஜ்மோகன்