Monday, June 25, 2018

அமுதம்




ஜெ

பால்ஹிகர் முன்பு மலைமேல் இருந்தபோது மலையுச்சியை அமுதம் இறங்கும் இடம் என்கிறார். அங்கே துக்கமும் மரணமும் இல்லை. அது வெண்ணிறமான பாலின் மையம். ஆனால் மலையிறங்கும்போது அந்தமலைச்சரிவு மரணவெளி என்கிறார். அங்கே ஒவ்வொரு கணமும் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே அங்கே மரணம் இல்லாமலாகவில்லை. அர்த்தமில்லாமல் ஆகிவிடுகிறது என்று தோன்றுகிறது

பால்ஹிகர் கீழே இறங்கும்தோறும் நகைத்துக்கொண்டே இருக்கிறார். அந்தச்சிரிப்பு ஏன் வருகிறது? வேறு ஒரு உலகத்திலிருந்துகொண்டு அமுதத்தை உண்டு கீழிருக்கும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டதனாலா? அல்லது அவ்வளவு ஆண்டு வாழ்ந்தாலே சிரிப்பு வந்துவிடுமா என்ன? விசித்திரமான ஒரு கதாபாத்திரம். வெண்முரசில் இதற்குச் சமானமான வேறு கதாபாத்திரமே இல்லை

மகேஷ்