Saturday, June 16, 2018

போரின் வருகை




ஜெ

சாத்யகியின் மைந்தர் மாயையின் இறப்புச் சடங்கிலேயே போரை கண்ணால் பார்த்துவிட்டார்கள். அவர்கள் முழுமையாகவே சிறுவர்நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வதில் சாத்யகிக்கு இருக்கும் தயக்கமும் சோர்வும் புரிந்துகொள்ளக்கூடியதே. அவனால் அசங்கனை நெர்கொண்டு பார்க்கவோ தொடவோ முடியவில்லை.

அந்தச் சடங்குக்குப்பின் மழையில் ஒட்டுமொத்த நகரமும் குளிர்ந்து செயலற்று நின்றிருப்பது பெரிய குறியிடு. அவர்கள் அந்தப்போரைக் கடந்து போருக்குப்பின்னால் வந்துசேரும் இழப்புகளைக் கண்ணால் பார்த்துவிட்டார்கள் என்ருதான் நினைக்கத் தோன்றுகிறது

சாத்யகியும் கூட வெவ்வேறு மனநிலைகளில் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறான். போரில் தன் குடி வெல்வதைப்பற்றி ஒரு மனக்கிளர்ச்சியை அடைகிறான். ஆனால் உடனே குமிழிகள் உடைந்து நுரை அழிவதுபோல மனம்சோர்ந்தும்விடுகிறான். எல்லாருமே உச்சகட்ட எழுச்சியும் உச்சகட்ட சோர்வும் ஒரேசமயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்

சுந்தர்