Thursday, June 21, 2018

மலைமுகடு




ஜெ


பால்ஹிக நாடு மட்டும் அல்ல பிரேமைவாழும் மலைமுகடும்கூட மாறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் நடுவே வணிகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். சின்னப்பையன்கள் பட்டு ஆடை வைத்திருக்கிறார்கள். மலைமக்களிடம் கீழ்நாட்டிலிருந்து சென்ற கத்திகள் புழங்குகின்றன. அவர்கள் மாறியதுபோலவும் தோன்றுகிறது. ஆனால் மனம் மாறவில்லை. வாழ்க்கைநோக்கு மாறவில்லை. மாற்றமும் மாற்றமின்மையும் ஒரே அத்தியாயத்தில் அழகாக வெளிப்படுகிறது. வெண்முரசில் பலவகையான நிலங்களும் வாழ்க்கைகளும் வந்தாலும் என்னை மிகமிகக் கவர்ந்ததுஇமையமலைமேல் உள்ள இந்த வாழ்க்கைச்சித்திரம்தான். இளவெயிலில் செல்லும் பூரிசிரவசின் காட்சி ஒரு கனவுபோல இருந்தது

பிரபாகர் எஸ்