Thursday, June 21, 2018

விதைமரம்




ஜெ

பெரும்பாலும் ஓர் அரசனிடமிருந்தே நாகரீகங்கள் உருவாகின்றன. அவன் வரலாற்றின் சிருஷ்டியாக இருக்கலாம். ஆனாலும் அங்கே தகுதியான ஒரு மனிதன் வரவேண்டியிருக்கிறது. அவனுக்குச் சாவு இல்லை. அவன் அந்த மண்ணில் புதைந்திருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டேதான் இருப்பான். பூரிசிரவஸ் பற்றி துரியோதனன் சொல்லும் இந்த வரி என்னை மிகவும் கவர்ந்தது. முருங்கைமரம் கிளைகளிலிருந்து எழுவதுபோல் அரசுகள் முதலரசன் ஒருவனின் உடலில் இருந்து முளைக்கின்றன என்பார்கள். இளையோனே, இன்று கண்டேன். உன் கொடிவழிகளில் அழியாப் பெயரென நீ வாழ்வாய் பூரிசிரவஸ் மறைந்தாலும் பால்ஹிகத்தில் இருந்துகொண்டே இருப்பான்  



எஸ்.ஆர்