Tuesday, June 26, 2018

சலிப்பு




ஜெ

பால்ஹிகரின் கதாபாத்திரத்திலுள்ள ஓர் அம்சம் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அதை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே  பலமுறை ஒருவகையான எரிச்சலாகக்கூட அதை உணர்ந்தேன். அவர் அமுதம் பொழியும் மலையில் இருந்து நேரடியாக இறங்கி மரணவெளியாகிய குருசேத்திரத்திற்கு வருகிறார். சாவதற்காகவே வருகிறார். ஏனென்றால் அமுதவாழ்க்கை சலித்துவிட்டது என்கிறார். சொர்க்கம் சலித்து பூமிக்கு வருவதுபோல. அந்த வாழ்க்கையில் அர்த்தமில்லை என்கிறார். சரி இங்கே அர்த்தம் உள்ளதா என்றால் இங்கேயும் எந்த அர்த்தமும் இல்லை. சும்மாதான் வருகிறார். ஆனால் இங்கே கூட்டத்தோடு கூட்டமாகச் செத்துக்கிடப்பதில் ஒரு அர்த்தம் உண்டு என்கிறார். அவருடைய தனித்தனியான பேச்சுக்களை எல்லாம் சேர்த்து ஓர் அர்த்தமுள்ள பார்வையை  உருவாக்கிக்கொள்வதுதான் வாசகன் செய்யவேண்டியது. வாசகனுக்கே அவை விடப்பட்டுள்ளன

ஜெயராமன்