Monday, June 11, 2018

அசங்கனின் கண்ணீர்




ஜெ

அசங்கனின் கண்ணீர் ஒரு அழகான புனைவுத்தருணம். அவன் ஏன் அழுதான் என்பது நுட்பமாக வாசிக்கத்தக்கது. போர் வரப்போகிறது, அதில் தான் உயிர்பிழைத்திருக்கப்போவதில்லை என்று தெரிந்து அழுகிறான் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் அழுதபின் அவன் சிரிப்புடன் செல்கிறான். அது துக்கம் அல்ல. ஒருவகையான மனநெகிழ்வுதான். அவனுக்கு சௌம்யையை மிகவும் பிடித்திருக்கிறது. அவள் மேல் காதலே வந்துவிட்டது. அவளைப்பார்த்துவந்ததுமே காதல் கொண்டிருப்பவனைப்போல அவன் அப்படியே அமைதியாகிவிடுகிறான். அந்தக் காதலின் இனிமை தாளாமல்தான் அவன் கண்ணீர்விடுகிறான் என்று சொல்லலாம். அல்லது காதலால் அல்ல. அவனுடைய adolocence அங்கே முடிவடைகிறது. அது ஒரு பெரிய இழப்பு. திருமணநாளிலேயேகூட ஆண்களும் பெண்களும் பதற்றமாக இருப்பார்கள். அது இதனால்தான். அது காரணமாக இருக்கலாம். ஒன்றைப்பெற்று மகிழ்ச்சி அடையும்போதே அதைவிட முக்கியமான, மீண்டும் கிடைக்காத ஒன்றை இழப்பதனால் அவன் துயரம் அடைகிறான் என்றும் தோன்றுகிறது. ஆனால் அவனுடைய அந்தக்கண்ணீரும் புன்னகையும் அழகாக உள்ளன. அதைச் சாத்யகி புரிந்துகொண்டவிதமும் அழகாக உள்ளது

சாரங்கன்