Wednesday, June 20, 2018

மனக்குதிரை-2



ஜெ

பூரிசிரவஸ் குதிரையில் செல்வது அவனுடைய மனசைத்தான் காட்டுகிறது என்று ஒரு வாசகர் எழுதியிருந்ததை வாசித்தேன். அதன்பிறகுதான் அந்தக்கோணத்திலே பார்த்தேன். ஒவ்வொரு நுட்பமும் கவித்துவமாக அழகாக பொருந்திவருவதைப் பார்த்தேன். நீங்கள் எழுதும்போது இப்படி ஒரு படிமத்திற்குள் சென்றுவிடுகிறீர்கள். அதன்பின்னர் அதுவே உங்களைக் கொண்டுசெல்கிறது. குதிரையை அடித்துச்செலுத்தும் பூரிசிரவஸ் அதன்பின்னர் குதிரையை இயல்பாகவே போகவிடுகிறான். அதேபோல பொதிகளை இறுக்கமாகக் கட்டிவைத்திருக்கிறான் பூரிசிரவஸ். மலைவணிகனாகிய ஜம்பா என்று சொல்கிறான். இவ்வளவு இறுக்கமாக பொதிகளை கட்டக்கூடாது. தளர்வாகவும் கட்டக்கூடாது. சிறுசிறு பொதிகளாகக் கட்டி அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டவேண்டும். மலையேறும்போது பொதி அசையக்கூடாது, பொதிக்குள் உள்ளவையும் அசையக்கூடாது. அதுவே புரவிக்கு பிடிக்கும். அதன் விசை குறையாதிருக்கும் அது அற்புதமான ஒரு உவமையாக ஆகிவிடுகிறது

மகாதேவன்