Monday, June 11, 2018

உள்ளம் கலங்குதல்




ஜெ


மாயையைச் சந்திக்கும்போது சாத்யகி நினைக்கும் ஓர் இடம் அற்புதமான ஓர் உளவியலாகப் பட்டது. மாயை பலவீனமானவள்தான். ஆனால் அவளை அவனால் வெல்ல முடியாது. போர்க்களத்தில்கூட உடலைவிட உள்ளம் சமானமாக இருந்தால்தான் அவர்களுடன் போரிடமுடியும். இல்லாவிட்டால் அவர்களை எதிர்கொள்ளவே முடியாது. மனநிலை இல்லாதவர்களின் கண்களைப்பார்த்து நம்மால் கொஞ்சநேரம்கூட பேசமுடிவதில்லை. நம்முடைய மனம் திடுக்கிட்டு பயம் வந்துவிடுகிறது. அவர்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நினைப்பினாலேயே நாம் நடுங்கிவிடுகிறோம். மனநிலை பிசகியவர்கள் வேறு உயிர்கள்போல ஆகிவிடுகிறார்கள். நாம் கொஞ்சமாவது அறியமுடியும்போதுதான் ஒரு உயிரை நம்மால் எதிர்க்கக்கூட முடிகிறது நாம் அறியாத விலங்கைப்பார்த்தால் பதறிவிடுகிறோம். அதைப்போலத்தான் இதுவும்


சண்முகம்