Friday, June 15, 2018

வரைபடம்




ஜெ

சாத்யகி மொத்தப்படையையும் முழுமையாக ஒரே பார்வையில் பார்க்கும் இடம் மிக நுட்பமான ஒன்று. மிக அரிதாகவே இது நிகழ்கிறது. நிர்வாகவியலில் இது அடிக்கடிச் சொல்லப்படுகிறது. ஒரு நிறுவனத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் கண்கலை அடைபவர்கள்தான் அதை நடத்தமுடியும். ஆனால் அது மிகச்சிலருக்கே நிகழ்கிறது. மிகவும் கடினமானது. சிலர் மையத்திலிருந்துகொண்டு மையத்தை மட்டுமே பார்த்து நிர்வாகம்செய்துவிடுவார்கள்தான். ஆனால் தப்புசெயுவார்கள். உண்மையில் நாம் வாழும் நகரங்களை நம்மால் மூழுசாகப் பார்க்கமுடியுமா? கூகிள் மேப்பில் பார்க்கலாம். ஆனால் அது ஒருபடம். ஒரு ரியலிட்டியாகப் பார்க்கமுடியுமா? முடிந்தால் அந்நகரத்தை ஆளலாம். சாத்யகி அந்தக்கண்ணை தற்செயலாக அடைவதும் தான் அரசகுடியாக ஆகிவிட்டதாக நிறைவுகொள்வதும் உடனே போரை நினைத்துச் சோர்வு கொள்வதும் கூர்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது

சரவணன்