Friday, June 29, 2018

வீரக்கலை



வணக்கம் சார்,

செந்நாவேங்கை 21 படித்தேன். நீங்கள் எவ்வளவோ தத்துவங்களை, கருத்துக்களை எழுதுகிறீர்கள். அதற்காக நீங்கள் படித்த தத்துவ நூல்கள், விவாதங்கள், அனுபவங்கள்  அனைத்தும் ஓரளவு உங்களின் பல கட்டுரைகள் மூலம் புரிந்து கொள்கிறேன். ஆனால் வீரக்கலையில் நீங்கள் சிலம்பம் சில நாட்கள் மட்டுமே கற்றதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது தவிர உங்கள் குருநாதரின் குருகுலத்தில் திரு.பிரெடி என்பவர் வில் பயிற்சியில் முன்னோடி என்றும் படித்திருக்கிறேன். 

ஆனால் வீரக்கலை சார்ந்து எழுதும் பல கருத்துக்கள் தத்துவங்கள் ஒரு தேர்ச்சி பெற்ற ஆசிரியரால் கூட இவ்வளவு தெளிவாக கூற முடியுமா என்று தெரியவில்லை. சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உங்கள் வார்த்தை கட்டுமானத்தை புரிந்து கொள்ள முடிகிறது சார், அது உங்கள் பலம். அனால் இந்த சூத்திரங்கள் எப்படி சார்? என்ன தான் ஒரு இலக்கிய எழுத்தாளர் பிறர் மனதினுள் புகுந்து உணர்ந்து எழுத முடியும் என்றாலும், எப்படி சார் இது எல்லாம் சாத்தியம்?

  "எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது" இந்த வரிகளை படித்து பிரமித்து விட்டேன். வெண்முரசில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கு பின்னால் உள்ள உங்களின் அபரிமிதமான உழைப்பு  பிரமிக்க வைக்கின்றது.


நான் வீரக்கலையில் நமது மரபு சார்ந்து படித்த புத்தகங்கள் அனேகமாக இல்லை. தற்போது கடைகளில் கிடைக்கும் பல புத்தகங்கள் படித்துள்ளேன். ஆனால் பல கருத்துக்கள் ஜெட்லீ, டோனி யென் போன்றவர்களின் (குங் பூ) திரைப்படங்கள் பார்த்து குழம்பி நண்பர்களுடன் விவாதித்து ஒரு மாதிரியாக  தெளிவடைய பல வருடங்கள் ஆயிற்று. ஆனால் நீங்கள் அனாவசியமாக எழுதி தள்ளுகிறீர்கள். எப்படி சார்? 

சார், நமது வீரக்கலை மரபு சார்ந்து ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்க முடியுமா? 



நன்றி,
ரஜினிகாந்த் ஜெயராமன்.

அன்புள்ள ரஜினிகாந்த்

மரபார்ந்த போர்க்கலை குறித்து நூல்கள் ஏதும் தமிழில் முறையாக எழுதப்படவில்லை. பெரும்பாலும் சிறு பயிற்சிக்குழுக்களிடையேதான் அவை புழங்குகின்றன. குமரிமாவட்ட்த்தில் பயிற்சியளிக்கும் குருநிலைகள் சில முன்பிருந்தன. நான் மேலும் கற்றுக்கொண்டது அரசியலியக்கம் ஒன்றில் இருந்த காலகட்டத்தில். நான் அதில் கற்றுக்கொண்டது பெரும்பாலும் ’தியரி;யைத்தான்

ஜெ.