Wednesday, June 20, 2018

மூன்று அரசியல்கள்


ஜெ


ஒருவாசகரின் கடிதம் எனக்கு புதிய திறப்பாக இருந்தது. வெண்முரசில் மூன்றுவகையான அரசியல்கள் வருகின்றன. அன்னைவழிச்சமூகங்களின் அரசியல். அவர்களெல்லாம் பெரும்பாலும் பழங்குடிகள். நிஷாதர் கிராதர் என்றெல்லாம் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் தேங்கிப்போனவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எல்லைகளுக்குள் குறுகி வாழ்கிறார்கள். அவர்களுக்கு அக்ரஸிவ் கேரக்டர் இல்லை. 

இன்னொருசாரார் தந்தைவழியினர். அசுரர்கள், ஷத்ரியர்கள். அவர்களுக்கு நடுவே சண்டை இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் பல்கிப்பெருகி பேரரசுகளை உண்டுபண்ணி மற்றவர்களை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். 

இன்னொருசாரார் நடுவே இருப்பவர்கள். ஷத்ரியர்களாக ஆனாலும்கூட அன்னைவழி மரபின் மனநிலைகள் கொண்டவர்கள். பாஞ்சாலம் அப்படிப்பட்டது. குந்தியும் அந்த மனநிலை. தமயந்திதான் அந்த மனநிலையின் சரியான உதாரணம். இங்கே நடப்பது இந்த மூன்று சக்திகள் நடுவே நடக்கும்போர்தான். 

இதில் அன்னைவழிச் சமூகங்களை மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போரிட்டு அழிப்பதையே நாம் தமயந்தி கதையிலும் அஸ்தினபுரியின் போரிலும் காண்கிறோம். ஒவ்வொரு அரசரும் எந்தெந்த வளர்ச்சிப்படிநிலைகளில் நிற்கிறார்கள் என்று பார்ப்பது வெண்முரசைப் புதியபார்வையில் பார்க்கச்செய்யும்

எஸ் காமராஜ்