Wednesday, June 27, 2018

துவாரகை



Dear Jeyamohan sir,

As an avid reader of your blogs and a collector of Vennmurasu books, I read this article in Times Of India and I wanted to bring it to your attention. What has been told as a fantasy and myth by the elite about Mahabharatha and Krishna is now proving to be historical event with retrieval of artifacts and presence of temples etc.


Swamynathan Manikandan



அன்புள்ள சுவாமிநாதன்

இது வரலாற்று ஆய்வுக்கட்டுரை அல்ல, ஆன்மிக பகுதியில் வெளிவந்துள்ளது

வரலாற்றின்படி 30000 ஆண்டு தொன்மையுள்ள நகரங்கள் ஏதும் பூமிமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதே இதுவரையிலான கணிப்பு. அப்போது மானுடக்குலம் நகரங்களை நோக்கி பரிணாமம் அடையவில்லை.

துவாரகை அனைத்துச் செய்திகளின்படியும் இரும்புக்காலகட்டத்தைச் சேர்ந்தது. சர்வதேச மரக்கல பயணங்கள் சாத்தியமான பின்னர் உருவானது. ஆகவே அதிகபட்சம் 4000 ஆண்டுகள் தொன்மையானதாகவே இருக்கமுடியும்


அவ்வாறு ஒரு நகரம் கடலுக்கடியில் இருக்கலாம். ஆனால் சென்ற பல ஆண்டுகளாகவே பலவகையான ஊகங்கள்தான் உலவிக்கொண்டிருக்கின்றன. முறையான தொல்லியலாய்வுத்தடையங்கள் கிடைக்கவில்லை

ஜெ