Saturday, June 9, 2018

மாயை 4




அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு

மூன்று தினங்களுக்கு முந்தைய வெண்முரசில் திரௌபதி எனக்கு யார் மீதும்கோபமில்லை, பழி வாங்கும் உணர்ச்சி இல்லை என்று சொன்னதும் நான்மாயையைத்தான் நினைத்துகொண்டேன். ஈஸ்டர் இரவு பூசைக்குப் போய்வரும்போது புதுநெருப்பு என்று மெழுகுத்திரி பற்ற வைத்துக் கொண்டுஅணையாமல் வீடு வரை கொண்டுவந்து சின்ன கைவிளக்கில் ஏற்றி,காலையில் அந்த நெருப்பில் இருந்து அடுப்பு பற்ற வைத்து இரவு
மறுபடியும் அடுப்பில் இருந்து விளக்கேற்றி, என்று அந்த புதிய நெருப்பை
அணையாமல் காத்துகொள்வோம். அதுபோல் மாயை. அந்த
வெஞ்சினத்தை அணையாமல் காத்து, நல்ல நாள் பெரிய நாட்களில்
ரத்தபலி கொடுத்து புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.

மாயை வந்தால்தான் சரிப்படுமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
மிகச்சரியாக கிருஷ்ணன் அதை சொல்லும்போது நானும்
பின்தொடர்கிறேன் என்று சந்தோஷமாய் இருந்தது. அதேபோல் சாத்யகி
பிள்ளைகளிடம் ஓவர் buildup கொடுத்துக் அழைத்து வரும்போதே தெரியும்.
கிருஷ்ணன் அவர்களை நடு அரண்மனையில் வைத்து பம்பரம் விடுவார்
என்று. கண்ணன் பழைய மாதிரி பிள்ளைகளோடு விளையாடினாலும்
முந்தைய மகிழ்ச்சியோடு படிக்க முடியவில்லை.

சுப்ரதீபம் என்ற வெள்ளை யானைக்குட்டி கதையில் வருவதற்கு 2
நாட்களுக்கு முன்னால் ஒரு கனவு கண்டேன். அழகிய வெள்ளை
யானைக்குட்டி ஒன்று கப்பலில் இருந்து இறங்குகிறது. அதை வெண்ணை
என்று அழைக்கிறார்கள். காலையில் கண் விழித்தும் இந்த கனவு
அப்படியே நினைவில் இருந்தது. 2 நாட்களுக்குப் பிறகு சுப்ரதீபம் வெண்
முரசில் வருகிறது. அன்றைக்கும் மிகுந்த சந்தோஷமாய் இருந்தது.

வாழ்த்துகளுடன்.
டெய்சி