Wednesday, June 20, 2018

விண்ணின் அழிவின்மை




அன்புள்ள ஜெ

பூரிசிரவஸுக்கும் புரேமையின் நாட்டுக்குமான உறவு பலவகைகளில் அழகிய சொற்கள் வழியாகச் சொல்லப்படுகிறது அங்கிருந்து ஒரு சரடு தன் அருகே தொங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு அழிவின்மைக்கு, மாறா இளமைக்கு சென்றுவிடமுடியும். என்கிறான். அந்த வரியை பலமுறை வாசித்தேன். ஒரு சரடு. அதில் ஏன் அவன் பற்றவில்லை? எனேன்றால் அழிவின்மை என்றால் ஒருவகையில் இங்கிருக்கும் உலகிலிருந்து மறைந்துவிடுவதுதானே? அதை எவரும் விரும்ப மாட்டார்கள். அவனுடைய மனைவியும் அந்த அச்சத்தைத்தான் சொல்கிறாள். பிரேமை அவனைத் தின்றுவிடுவாள். மலையுச்சிகள் இப்படி மனிதனைத் தின்றுவிடும் என்பது உண்மை. ஆகவேதான் துறவிகள் எல்லாவற்றையும் துறந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள்

எஸ்